Tuesday 3 September 2013

குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ?



பெரும்பாலும் நடைமுறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களின் செயல்பாடுகள் அவை எவ்வாறு செயபடுகிறது என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை ...அதனை ஆராய தொடங்கும் போது தான் அதனுடைய அற்புதமான வடிவமைப்புகள் செய திறன்கள் போன்றவை நம்மை வியப்படைய செய்யும் .அந்த வகையில் நீண்ட நாளாக எனக்கு இருந்து வந்த சந்தேகம் தான் இது...  குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ? எவ்வாறு குளிர்ச்சியை செயற்கையாக உண்டு பண்ணுகிறது?

நீண்ட நாட்களாக இதற்காக விடையை தேடுதளங்களில் தேடிகொண்டிருந்தேன் ...பெரும்பாலும் ஆங்கில வடிவில் மட்டுமே கிடைக்கபெற்றன .இன்று எனது நண்பர் கோபி அவர்களின் விளக்கத்தை பெற்று தெளிவுபெற்றேன் .பெரும்பாலும் தமிழில் இதனை பற்றிய தொகுப்புகள் அதிகமாக  இருப்பதாக தெரியவில்லை . திரு பாபு அவர்கள் நிலா முற்றம் என்ற தளத்தில்  எனக்கு ஏற்பட்ட அதே  சந்தேகத்திற்கான விளக்க கட்டுரையை  எதேச்சையாக காண நேரிட்டது .அந்த தொகுப்பை உங்களுக்கும் பயனளிக்கும் வகையில் எனது இந்த தளத்தில் பதிவிடுகிறேன் .

இந்த குளிர் சாதனம் பயன்பட அடிப்படை தத்துவம் என்னவென்றால் "ஒரு நீர்மமானது தான் ஆவியாவதற்கு அருகிலுள்ள (சுற்றுப்புறத்திலுள்ள) பொருட்களின் வெப்பத்தை எடுத்துக்கொள்ளும்.
"

உதாரணதிற்கு காற்றில் உலர வைக்கப்படும் ஈரத்துணிகளானது இதன் அடிப்படையிலேயே உலர்கின்றன. அதாவது துணிகளில் இருக்கும் ஈரமானது ஆவியாவதற்குச் சுற்றுப்புறத்திலுள்ள காற்றின் வெப்பத்தை எடுத்துக்கொண்டு ஆவியாகிவிடும்.

அதே போல நமது சருமத்தில் விடப்படும் பெட்ரோலானது எளிதில் ஆவியாகக்கூடியது, அப்படி ஆவியாவதற்கு நம் சருமத்தில் உள்ள வெப்பத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்வதால் நம் சருமத்தின் வெப்பநிலை குறைந்து நாம் குளிர்ச்சியாக உணர்கிறோம்.

வெப்ப பதனாக்கியும் (Air Conditioner)  இதன் அடிப்படையொட்டியே வேலை செய்கிறது .கூடுதான் திறனும் காற்றை கலந்தும் அறையை குளிவிக்கிறது.மற்றபடி இரண்டும் ஒருமித்த அடிப்படை தத்துவத்தை கொண்டே செயல்படுகின்றன .

சரி சரி ...அதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள்  பற்றி தெரிந்துகொள்வோம் ...

அமைப்பு : பொதுவான இந்தியத் தயாரிப்பு குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் வளைந்து வளைந்து பாம்பு போல சிறிய குழாய் அமைப்பு இருக்கும், பார்த்திருப்பீர்கள். அவ்வமைப்பு நீண்டு குளிர்சாதனப் பெட்டியின் உட்புறம் உள்ள உறைநிலைப் பெட்டி (Freezer)யைச் சுற்றியும் வளைந்து வளைந்து அமைந்திருக்கும். பெட்டியின் பின்னே அழுத்துவான் (Compressor) ஒன்றும் இருக்கும். குழாய் அமைப்பிற்குள் மிகக்குறைந்த வெப்பநிலையில் ஆவியாகக்கூடிய ஒரு குளிரி# (Coolant) அடைக்கப்பட்டிருக்கும்.



செயல்பாடு : மின்சக்தியால் இயங்கும் அழுத்துவானானது குளிரி வாயுவை (Coolant) அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கும். வாயுவை அழுத்தத்திற்கு உள்ளாக்கினால் அது நீர்மமாகும்1. அழுத்தம் அதிகரிக்கும்பொழுது வெப்பமும் உருவாகும்2. பெட்டியின் பின்புறமுள்ள வளைவுக் குழாய்களின் வழியாக அழுத்தப்பட்ட நீர்மம் பயணிக்கும்பொழுது அவ்வெப்பமானது வெளியில் கடத்தப்பட்டுவிடும். (வெளிப்புறமுள்ள வளைவுக் குழாய்களில் கறுப்பு வண்ணம் பூசப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்3.)

பின்னர் விரிவகக்குழல் (Expansion Valve) வழியாக அந்நீர்மம் செல்லும். அதாவது அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து (High Pressure Zone) அழுத்தம் குறைவாக உள்ள பகுதிக்குச் (Low Pressure Zone) செல்கிறது. (விரிவகக்குழலிற்கு இந்தப்பக்கம் அழுத்துவானால் அழுத்தம் கொடுக்கப்படுவதால் இப்பகுதி மிகைஅழுத்தப் பகுதியாகிறது. விரிவகக்குழலிற்கு அந்தப்பக்கம் அழுத்துவானால் உறிஞ்சப்படுவதால் அப்பகுதி குறைஅழுத்தப் பகுதியாகிறது.)

இப்பொழுது நீர்மமானது குளிர்சாதனப் பெட்டியின் உட்புறமுள்ள குழாய் பகுதிக்குள் பயணிக்கிறது. நீர்ம நிலையிலுள்ள அக்குளிரி அழுத்தம் குறைவதனால் வாயுவாக மாறும்பொழுது பெட்டியின் உட்புறமுள்ள பொருட்களின் வெப்பம் அல்லது உட்புறம் நிலவும் வெப்பத்தினை எடுத்துக் கொள்ளும். உடனடியாக உட்புற வெப்பம் குறைந்துவிடும். மீண்டும் அவ்வாயுவினை அழுத்துவான் அழுத்தத்திற்குட்படுத்தி நீர்மமாக மாற்றி இதே செயல்பாடு தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும்.


மேலதிகத் தகவல்கள்:
அம்மோனியா வாயு -35.5 பாகை செல்சியஸ் அளவிலேயே ஆவியாகும் என்றாலும் அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டிகளில் குளிரி வாயுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை, (பெரிய தொழிற்சாலைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே பயன்படுத்தப்படும்) மாற்றாக குளேரோ ஃபுளோரோ கார்பன் (Chloro Fluoro Carbon-CFC) மனிதர்களுக்கு நேரடித் தீங்கு விளைவிக்காத காரணத்தினால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், காற்றுமண்டலத்திலுள்ள ஓசோன் படலத்தைச் சிதைப்பதில் இவ்வாயு பங்கெடுக்கின்றது.

 நமது சமையல் எரிவாயு அப்படியொரு அழுத்தத்திற்கு உள்ளாக்கி நீர்மமாகவே உருளைகளில் (Cylinder) அடைக்கப்பட்டு நமது இல்லங்களுக்கு வரும். நாம் உருளையின் குழாயைத் திறக்கும்பொழுது, அழுத்தம் குறைந்து அறைவெப்பநிலைக்கு வரும் அந்நீர்மமானது வாயு வடிவிற்கு மாறிவிடும். அதனாலேயே அதனை நாம் நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயு (Liquified Petrolium Gas-LPG) என அழைக்கின்றோம். அவ்வாயுவிற்கு இயற்கையில் மணமில்லை, கசிவு ஏற்பட்டால் உணர்வதற்காகச் செயற்கை மணம் சேர்க்கப்படுகிறது.

 மிதிவண்டி (bi-Cycle) சக்கரத்திற்கு காற்றடிக்கும் அழுத்துவானை (Pump) காற்றடித்தபின் தொட்டுப் பாருங்கள் சூடாக இருக்கும். காற்று அழுத்தப்படுவதாலும், அழுத்தும் தண்டின் (Piston) உராய்வினாலும் ஏற்படும் வெப்பமே அது.

கறுப்பு வண்ணமே வெப்பத்தினை எளிதில் உட்கவரும். எளிதில் உட்கவரும் வண்ணமே வெப்பத்தினை எளிதில் வெளியேயும் விடும். Objects that are good emitters are also good absorbers (Kirchhoff's Law of Thermal Radiation : At thermal equilibrium, the emissivity of a body (or surface) equals its absorptivity.)


-நன்றி: திரு பாபு
இணைப்பு :http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13101
படம் www.howstuffworks.com

மொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள்

* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித் தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப் பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. 
* ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 
* உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும்.
* மொபைல் போன் திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.
Click Here

Monday 2 September 2013

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.
மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.
புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
புதியதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில்
வைத்திருத்தல் வேண்டும். முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை
கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் I agree என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில்
முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact
detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.
கவணிக்க 1: Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detail-ம் செய்ய வேண்டும்.
கவணிக்க 2: மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
கவணிக்க 3: ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.
கவணிப்பு 4: Update Profile-ல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான விவரம்: உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : ARD2012M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CUD - என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்)
பதிவு செய்த ஆண்டு: 2010
ஆண் / பெண் : M/F
பதிவு எண்: 7802
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID: ARD2012M00007502
Password: dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.
வேலைவாய்ப்பு அலுவக குறியீட்டு எண்ணும், மாவட்ட விவரமும்:
1. ARD - District Employment Office-Ariyalur
2. CBD - District Employment Office-Coimbatore
3. CBR - Office of the Regional Deputy Director (Employment)-Coimbatore
4. CDC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Coimbatore
5. CHD - District Employment Office-Chennai CHG Head Office-Chennai
6. CHP - Professional and Executive Employment Office-Chennai
7. CHR - Regional Deputy Director Office-Chennai
8. CHS - District Employment Office Special Employment Office for Physically Handicapped-Chennai
9. CHT - District Employment Office(Technical Personnel).-Chennai
10. CHU - District Employment Office (Unskilled)-Chennai
11. CUC - Coaching-cum-Guidance centre for SC/ST-Cuddalore
12. CUD - District Employment Office-Cuddalore
13. DGD - District Employment Office-Dindigul
14. DRD - District Employment Office-Dharmapuri
15. ERD - District Employment Office-Erode
16. KGD - District Employment Office-Krishnagiri
17. KPD - District Employment Office-Kancheepuram
18. KRD - District Employment Office-Karur
19. MDD - District Employment Office-Madurai
20. MDP - Professional and Executive Employment Branch Office-Madurai
21. MDR - The Regional Deputy Director (Employment) Office-Madurai
22. NGD - District Employment Office-Kanyakumari
23. NKD - District Employment Office-Namakkal
24. NPD - District Employment Office-Nagapattinam
25. PDD - District Employment Office-Pudukottai
26. PRD - District Employment Office -Perambalur
27. RPD - District Employment Office-Ramanathapuram
28. SGD - District Employment Office-Sivaganga
29. SLD - District Employment Office-Salem
30. TCC - Coaching-cum-Guidance centre -Trichy
31. TCD - District Employment Office-Trichy
32. TCR - The Regional Deputy Director (Employment)-Trichy
33. THD - District Employment Office-Theni
34. TJD - District Employment Office-Thanjavur
35. TMD - District Employment Office-Thiruvannamalai
36. TNC - Coaching-cum-Guidance Centre-Thirunelveli
37. TND - District Employment Office-Thirunelveli
38. TPD - District Employment Office-Tiruppur
39. TRD - District Employment Office-Thiruvarur
40. TTD - District Employment Office-Tuticorin
41. TVD - District Employment Office-Thiruvallur
42. UGD - District Employment Office-Nilgiris
43. UGV - Special Vocational Guidance Centre for SC/ST-Nilgiris
44. VLC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Vellore
45. VLD - District Employment Office-Vellore
46. VPD - District Employment Office-Villupuram
47. VRD - District Employment Office-Virudhunagar
thanks for dinamani

Sunday 4 August 2013

சொத்து வாங்கும்போது சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்

வீடு, வீட்டு மனை, நிலம் வாங்கும்போது அது தொடர்பான ஆவணங்கள் தான் அந்த சொத்தின் மீது வாங்கியவருக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டுகின்றன. ஆவணங்கள் சரியாக இல்லை என்றால் வாங்கிய சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஆகையால் சொத்து வாங்கும்போது அது தொடர்பான ஆவணங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அந்த ஆவணங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
 பத்திரம்
சொத்து வாங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆவணம் பத்திரம் ஆகும். இடத்தை உரிமையாளரிடம் இருந்து அதை வாங்கும்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது. இடத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லை என்றால் அவருடைய வாரிசுகள் அனைவருடைய சம்மதத்தோடு தான் நிலம் விற்கப்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
வாரிசுகள் யார் என்பதை வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது நல்லது. வாரிசுகள் யாருக்கும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. வாரிசுகளில் யாராவது மைனராக இருந்தால் கோர்ட்டு நியமிக்கும் காப்பாளர் மூலம் தான் சொத்து விற்பனை செய்யப்பட வேண்டும்.
 பட்டா
நிலத்தின் மீது யாருக்கு உரிமை இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் பட்டா இடத்தை விற்பவர் பெயரில் தான் இருக்கிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும். அவர் வேறு ஒருவரிடம் இருந்து நிலத்தை வாங்கி இருந்து தனது பெயருக்கு மாற்றாமல் இருக்கலாம். ஒருவேளை நிலத்தின் உரிமையாளர் இறந்துபோய் இருந்தால் பட்டா பழைய உரிமையாளர் பெயரிலேயே இருக்கும்.
அப்படி இருக்கும்போது இடத்தை வாங்கும் உங்கள் பெயருக்கு மாற்றும்போது சிக்கல்களை சந்திக்க நேரலாம். எனவே பட்டாவை இடத்தை வாங்கும் உங்கள் பெயருக்கு மாற்றுவதில் பிரச்சினை இருக்கிறதா? என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
அதிகார பத்திரம் (பவர் ஆப் அட்டர்னி)
 சொத்தின் உரிமையாளர் தனது சொத்தை விற்பனை செய்து கொடுப்பதற்காக நியமித்து இருக்கும் ‘பவர் ஆப் அட்டர்னி’ அதிகாரம் பெற்றவர் மூலம் சொத்து வாங்கும்போது அவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் சொத்தை விற்பனை செய்து ஆவணத்தில் கையெழுத்து போடுவதற்கான அதிகாரம் அல்லாமல் குறிப்பிட்ட ஒரு செயலை மட்டுமே செய்யக்கூடிய தனி அதிகார பத்திரத்துக்கான ‘பவர்’ உரிமை கூட மட்டுமே வழங்கப்பட்டு இருக்கலாம். அப்படி இருக்கையில் அவரிடம் இருந்து சொத்தை வாங்கி விற்பனை ஆவணம் பதிவு செய்து கொள்ள முடியாது.
மேலும் ‘பவர் ஆப் அட்டர்னி’ அதிகாரத்தை நிலத்தின் உரிமையாளர் ரத்து செய்திருந்தாலும் பதிவு செய்வது செல்லாததாகி விடும் என்பதால் உரிமையாளரை நேரில் பார்த்து பேசி விடுவது நல்லது.
 வில்லங்க சான்றிதழ்
சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும் சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்சினைகள் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள உதவும் வில்லங்க சான்றிதழை 30 ஆண்டுகளுக்காவது சரி பார்த்து விட வேண்டும். அதன் மூலம் சொத்து மீது வில்லங்கம் எதுவும் இருந்தால் தெரிந்து விடும். தாய்பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அதுவரை உள்ள அனைத்து பத்திரங்களையும் நாம் சரி பார்த்துக் கொள்ளலாம்.
சொத்து அடமானத்தில் இருந்தாலும் தெரிந்து விடும். அதே சமயத்தில் பதிவு செய்யாமல் வேறு யாரிடமாவது சொத்தை விற்க ஒப்பந்தம் போட்டு இருந்தால் அது தெரியாது. ஆகவே வில்லங்க சான்றிதழ் மட்டுமின்றி அது சார்ந்த விஷயங்களையும் கவனமாக ஆராய வேண்டும்.
மூல பத்திரம்
 சொத்தை வாங்குவதற்கு முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். அந்த ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் இருக்கலாம். அதனால் ஆவணத்தை சரிபார்ப்பது நல்லது. சில சமயம் மூல ஆவணம் நமது கைக்கு கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது ஒரிஜினல் மூல ஆவணத்தை பார்வையிட்டு சரி பார்ப்பது முக்கியம்.
கட்டுமான அனுமதி
 அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதாக இருந்தால் மற்ற ஆவணங்களுடன் கட்ட அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து அனுமதி விவரங்களையும் பார்க்க வேண்டும். அனுமதி பெற்றப்படி தான் கட்டுமான பணி நடைபெற்று இருக்கிறதா? விதிமீறல் எதுவும் இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இதுதவிர நிலமாக இருந்தால் அடங்கல், சிட்டா தொடர்பான ரசீதுகள், சொத்துவரி செலுத்திய ரசீதுகளை பார்வையிட்டு முறையாக வரி செலுத்தப்பட்டு வருகிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

Tuesday 29 January 2013

சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரி

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in

2 Alandur -mlaalandur@tn.gov.in

3 Alangudi -mlaalangudi@tn.gov.in
4 Alangulam -mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram --mlaambasamudram@tn.gov.in
6 Anaicut --mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam ---mlaandimadam@tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar---mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi--mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi ---mlaaravakurichi@tn.gov.in
14 Arcot ---mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni --mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor---mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur--mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi--mlacheranmahadevitn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam--mlagobichettipalayam@n.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham---mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai---mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---mlapanruti@tn.gov.in
119 Papanasam---mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
124 Perambalur----mlaperambalur@tn.gov.in
125 Perambur---mlaperambur@tn.gov.in
126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---mlapernambut@tn.gov.in
130 Perundurai---mlaperundurai@tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---mlapollachi@tn.gov.in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---mlapongalur@tn.gov.in
135 Ponneri---mlaponneri@tn.gov.in
136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---mlaranipet@tn.gov.in
144 Rasipuram----mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
146Dr.RadhakrishnanNagar--mlarknagar@tn.gov.in
147 Royapuram---mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---mlasaidapet@tn.gov.in
149 Salem -I---mlasalem1@tn.gov.in
150 Salem-II---mlasalem2@tn.gov.in
151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----mlasholinghur@tn.gov.in
162 Singanallur---mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---mlatalavasal@tn.gov.in
171 Tambaram---mlatambaram@tn.gov.in
172 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---mlathanjavur@tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---mlathirumayam@tn.gov.in
180Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---mlathottiam@tn.gov.in
188 Tindivanam---mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode---mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194---mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani----mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai--mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
207 Triplicane----mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----mlavalangiman@tn.gov.in
216 Valparai----mlavalparai@tn.gov.in
217 Vandavasi----mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---mlavellakoil@tn.gov.in
226 Vellore---mlavellore@tn.gv.in
227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar---mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---mlayercaud@tn.gov.in
234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

Reference By : http://www.tn.gov.in/telephone/email-MLA.html